Monday 17 June 2013

ஜெயலலிதா முதல்வராக இருப்பதால் இலங்கைக்கு ஆபத்து- சொல்கிறார் கோத்தபாயா:

ஜெயலலிதா முதல்வராக இருப்பதால் இலங்கைக்கு ஆபத்து- சொல்கிறார் கோத்தபாயா:





கொழும்பு: தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கை தொடர்பாக எடுத்து வரும் நிலைப்பாடு காரணமாக இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு ஆபத்தாக உள்ளது என்று இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவின் தம்பி கோத்தபாயா ராஜபக்சே கூறியுள்ளார். இதுகுறித்து கொழும்பில் உள்ள கோத்தேல்வாலா பாதுகாப்பு பல்கலைக்கழத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது - இலங்கை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ள நிலைப்பாடும், கொள்கைகளும், எங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், இறையாண்மைக்கு ஆபத்தாகவும் உள்ளது. இலங்கையி்ல் என்ன நடக்கிறது என்று இந்தியாவுக்கு நன்றாக தெரியும். இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில், தமிழகத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக அங்கு தேர்தல் நடக்கும்போதெல்லாம் இங்குள்ள மக்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். சமீபத்தில் கூட சர்வதேச அளவில் இலங்கையை தனிமைப்படுத்த இந்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. தமிழகத்தின் பெரும் பகுதியினர், இலங்கைக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர். ஜெயலலிதாவின் நிலைப்பாடு, அவரது பேச்சு, அவரது கொள்கைகள், இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு ஆபத்தாக உள்ளது. இலங்கையில் உள்ள சில தமிழர்கள், தங்களது சக தமிழர்களை விட தமிழகத்து தமிழர்களிடம் அதிக நெருக்கம் காட்டுகின்றனர். பாசம் காட்டுகின்றனர். சில வெளிநாட்டு கட்சிகளுடன் கை கோர்த்து் கொண்டு, அகண்ட தமிழ் தேசம் அமைக்க முற்படுகின்றனர். மேலும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய சிலர் இலங்கைக்கு வெளியே குறிப்பாக தமிழகத்தில் இருந்தபடி இலங்கைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இதை மிகப் பெரிய மிரட்டலாக நாங்கள் கருதுகிறோம். இலங்கை கடல் பகுதிக்குள் தொடர்ந்து தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைகின்றனர். இவர்கள் போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத காரியங்களில் ஈடுபடுகிறார்கள். இதைத் தடுக்க வேண்டியது அவசியமாகும் என்று பேசியுள்ளார் கோத்தபாயா ராஜபக்சே

No comments:

Post a Comment