Monday, 17 June 2013

 ராஜ்யசபா தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளராக அக்கட்சியின் தலைமை நிலைய பொறுப்பாளரும் பொருளாளருமான ஏ.ஆர். இளங்கோவன் போட்டியிடுவதாக கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்:







சென்னை: ராஜ்யசபா தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளராக அக்கட்சியின் தலைமை நிலைய பொறுப்பாளரும் பொருளாளருமான ஏ.ஆர். இளங்கோவன் போட்டியிடுவதாக கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். உடனடியாக இளங்கோவன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். ராஜ்யசபாவிற்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில், அ.தி.மு.கவின் 4 பேரின் வெற்றியும், அதிமுக ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜாவின் வெற்றியும் உறுதியான நிலையில், மேலும் ஒருவரின் வெற்றி தான் கேள்விக்குறியாக உள்ளது. இந்த இடத்துக்கு தி.மு.க. சார்பில் தற்போது ராஜ்யசபா எம்.பியாக இருக்கும் கனிமொழி வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டார். தேமுதிக போட்டியிடாவிட்டால் கனிமொழிக்கு வெற்றி சாத்தியம் என்ற நிலையில், தே.மு.தி.க சார்பில் கட்சியின் தலைமை நிலையப் பொறுப்பாளரும் பொருளாளருமான ஏ.ஆர். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை கட்சித் தலைவர் விஜயகாந்த்தே அறிவித்து விட்டார். இதையடுத்து இளங்கோவன் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். ஏ.ஆர். இளங்கோவன் சேலத்தை அடுத்த ஆத்தூரைச் சேர்ந்தவர். 20 வருடமான விஜய்காந்தின் மன்றத்தில் இருக்கும் இவர் டூவீலர் மெக்கானிக்காக இருந்தவர். படித்தது மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே. ஆனாலும் தேமுதிகவின் பொருளாளராக உள்ளார். 

No comments:

Post a Comment