Monday, 17 June 2013

இப்போதைக்கு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது: கர்நாடக முதல்வர்

இப்போதைக்கு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது: கர்நாடக முதல்வர்



பெங்களூர்: தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு தான் எதிராக இல்லை என்றும், ஆனால் தண்ணீர் திறந்துவிட தற்போதைக்கு வாய்ப்பில்லை என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஹராங்கி, கபினி, ஹேமாவதி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் குறைந்தபட்ச அளவை விட குறைவாகத் தான் தண்ணீர் உள்ளது. தண்ணீர் பிரச்சனை பெரிதாகி உள்ளது. வரும் மாதங்களில் பெங்களூர் மக்களுக்கு தண்ணீர் வழங்கவே அரசு சிரமப்படலாம். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு நான் எதிராக இல்லை. ஆனால் தற்போதைக்கு தண்ணீர் திறந்துவிடும் வாய்ப்பில்லை. எங்கள் மாநிலத்திலேயே குடிநீர் தட்டுப்பாடாக இருக்கையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி ஜூன் மாதத்தின் முதல் 20 நாட்களில் தமிழகத்திற்கு எப்படி 1.2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட முடியும்? கர்நாடகத்தின் பிரச்சனையை தமிழகம் புரிந்து கொண்டு தண்ணீர் கேட்டு வலியுறுத்தாமல் இருக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு நல்ல பலனை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேற்பார்வை குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் முடிவுகளை கர்நாடகம் ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழக அரசு கூறுவது போன்று நாங்கள் உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை நாங்கள் பின்பற்றுகிறோம் என்றார்.

No comments:

Post a Comment