விடியலை நோக்கி
Saturday, 9 April 2016
Wednesday, 3 July 2013
6000 வருடங்களாக இயங்கி தமிழர்களின் பழம்பெருமையை பறைசாற்றும் மாநகரம் :
6000 வருடங்களாக இயங்கி தமிழர்களின் பழம்பெருமையை பறைசாற்றும் மாநகரம் :
உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்கம், ஏதென்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுக்கான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம் உருவாக்கப்பட்டது. ஆனால் சுமார் 6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் மதுரை தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள். நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை "The World's only living civilization" என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின் "The Story of India" ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்ஸ்.
மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வியக்கத்தக்க தகவல் என்னவென்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த இடத்தின் மீது அடையாளமாய் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது. இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம். அங்கு வந்து குறிப்பிட்ட நாட்களில் வந்து பூஜித்து வழிபடும் வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர். அவர்களை விசாரித்த போது பரம்பரை, பரம்பரையாக பாரம்பரியமாக அழிபடுவதாகவும் இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அது அவர்களது முன்னோர்கள் புதையுண்ட இடம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர். ஆம் நண்பர்களே சுமார் 6000 வருடமாக தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம் கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்கி வருகிறது என்றால் பிரமிப்பாக உள்ளதல்லவா?
அது மட்டுமல்ல மதுரைக்கு தூங்கா நகரம் என்ற பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் இட்ட பெயர் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக் கடைகள் பிரசித்தம். அவற்றை அல் அங்காடி என்று கூறுவதுண்டு. இதன் காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது.
ஆறாயிரம் ஆண்டுகளாக உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும், கலாச்சாரத்தையும், மொழியையும் சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம் மதுரை மட்டும் தான் என்பது பெருமைபடக்கூடிய விடயம் தானே!
குறிப்பு: அன்றைய மதுரை என்பது இன்றைய மதுரையைக் காட்டிலும் மிகப் பெரிய அளவுடையது. மதுரையுடைய துறைமுகமாக தொண்டி செயல்பட்டது மேலும் கீழ் திசையில் தூத்துகுடி வரையிலும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது!
Monday, 1 July 2013
தமிழகத்தில் அன்சுல் மிஸ்ரா ஐ.ஏ.எஸ் அதிகாரி டம்மியாக்கப்பட்டிருக்கிறார்.
Our Collector always great man..
தமிழகத்தில் அன்சுல் மிஸ்ரா ஐ.ஏ.எஸ்
அதிகாரி டம்மியாக்கப்பட்டிருக்கிறார்.
இனிமேல்வணிகவரித்துறையின்
இணை செயலாளராக இருப்பாராம். பசையுள்ள
பதவிதான். ஆனால் பைசா வாங்காத அன்சுல்
மிஸ்ராவுக்கு இது எதற்கு பயன்படப் போகிறது?
அவருக்கு மக்களோடு மக்களாக ஃபீல்டில் இறங்கிக்
கலக்கும் வேலைதான் சரிப்பட்டு வரும்.
வணிகவரிக்கு எல்லாம் வேறு ஆட்கள்
இருக்கிறார்கள்.
அன்சுல் மிஸ்ராவின் working style-
செண்டான் என்றொரு மனிதர். எங்கள்
அமத்தா ஊர்க்காரர்.
அவரது மகளுக்கு பண்ணாரியம்மன் பொறியியல்
கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால்
ஃபீஸ் கட்ட பணம் இல்லை. வங்கியில் லோன்
வாங்குவது பற்றிய விவரங்கள் தெரியாமல்
விட்டுவிட்டார். கடைசி நேரத்தில் பணம் புரட்ட
முடியாமல் கிட்டத்தட்ட படிப்பே வேண்டாம்
என்று முடிவு செய்துவிட்டார்கள்.
நல்லவேளையாக அந்தப் பக்கம் ஆய்வுக்குச் சென்ற
அன்சுல் மிஸ்ராவிடம் இந்தத் தகவல்
சேர்ந்துவிட்டது. விவரங்களைக்
கேட்டுவிட்டு அடுத்த நாள்
தனது அலுவலகத்திற்கு வரச்
சொல்லிவிட்டு சென்றுவிட்டார். செண்டானும்,
அவரது மகளும் சென்ற போது தேவையான
பணத்தைக்
கொடுத்துவிட்டு “இதை உங்களுக்கு சும்மா தரவில்
என்னிடமும் இப்போதைக்கு அதிகம் பணம்
இல்லை. சம்பளத்தில் இருந்துதான் இதைக்
கொடுக்கிறேன். வங்கிக் கடன் வாங்கித்
தருவதற்கு நான் பொறுப்பு. கையில் வந்தவுடன்
இதை எனக்கு திருப்பிக் கொடுத்தால் போதும்”
என்று சொல்லிவிட்டு அந்தப் பெண்ணை படிக்க
வைத்தவர் அன்சுல்.
லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி டேபிளுக்குள்
செருகிக் கொள்ளும் ஆர்.டி.ஓக்கள், சப்-கலெக்டர்கள்
பற்றிய கதைகளையே திரும்பத் திரும்ப கேட்டுக்
கொண்டிருந்தவர்களுக்கு, சம்பளப் பணத்தில்
உதவி செய்த அன்சுல் மிஸ்ராவெல்லாம் நிச்சயம்
ஆச்சரியமான அதிகாரிதான்.
சமீபகாலத்தில் அவர் மதுரையை கலக்கிக்
கொண்டிருக்கிறார் என்று செய்திகளை பார்த்த
போது ஆச்சரியம் எதுவும் இல்லை. அவர்
அப்படித்தான் என்று தெரியும்.
இப்பொழுது மதுரையை விட்டு அனுப்பிவிட்டார்கள்
என்ற போதும் ஆச்சரியம் எதுவும் இல்லை.
ஆட்சியாளர்கள் எப்பவும் இப்படித்தான் என்பதும்
நமக்குத் தெரியும் அல்லவா?
#
தமிழகத்தில் அன்சுல் மிஸ்ரா ஐ.ஏ.எஸ்
அதிகாரி டம்மியாக்கப்பட்டிருக்கிறார்.
இனிமேல்வணிகவரித்துறையின்
இணை செயலாளராக இருப்பாராம். பசையுள்ள
பதவிதான். ஆனால் பைசா வாங்காத அன்சுல்
மிஸ்ராவுக்கு இது எதற்கு பயன்படப் போகிறது?
அவருக்கு மக்களோடு மக்களாக ஃபீல்டில் இறங்கிக்
கலக்கும் வேலைதான் சரிப்பட்டு வரும்.
வணிகவரிக்கு எல்லாம் வேறு ஆட்கள்
இருக்கிறார்கள்.
அன்சுல் மிஸ்ராவின் working style-
செண்டான் என்றொரு மனிதர். எங்கள்
அமத்தா ஊர்க்காரர்.
அவரது மகளுக்கு பண்ணாரியம்மன் பொறியியல்
கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால்
ஃபீஸ் கட்ட பணம் இல்லை. வங்கியில் லோன்
வாங்குவது பற்றிய விவரங்கள் தெரியாமல்
விட்டுவிட்டார். கடைசி நேரத்தில் பணம் புரட்ட
முடியாமல் கிட்டத்தட்ட படிப்பே வேண்டாம்
என்று முடிவு செய்துவிட்டார்கள்.
நல்லவேளையாக அந்தப் பக்கம் ஆய்வுக்குச் சென்ற
அன்சுல் மிஸ்ராவிடம் இந்தத் தகவல்
சேர்ந்துவிட்டது. விவரங்களைக்
கேட்டுவிட்டு அடுத்த நாள்
தனது அலுவலகத்திற்கு வரச்
சொல்லிவிட்டு சென்றுவிட்டார். செண்டானும்,
அவரது மகளும் சென்ற போது தேவையான
பணத்தைக்
கொடுத்துவிட்டு “இதை உங்களுக்கு சும்மா தரவில்
என்னிடமும் இப்போதைக்கு அதிகம் பணம்
இல்லை. சம்பளத்தில் இருந்துதான் இதைக்
கொடுக்கிறேன். வங்கிக் கடன் வாங்கித்
தருவதற்கு நான் பொறுப்பு. கையில் வந்தவுடன்
இதை எனக்கு திருப்பிக் கொடுத்தால் போதும்”
என்று சொல்லிவிட்டு அந்தப் பெண்ணை படிக்க
வைத்தவர் அன்சுல்.
லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி டேபிளுக்குள்
செருகிக் கொள்ளும் ஆர்.டி.ஓக்கள், சப்-கலெக்டர்கள்
பற்றிய கதைகளையே திரும்பத் திரும்ப கேட்டுக்
கொண்டிருந்தவர்களுக்கு, சம்பளப் பணத்தில்
உதவி செய்த அன்சுல் மிஸ்ராவெல்லாம் நிச்சயம்
ஆச்சரியமான அதிகாரிதான்.
சமீபகாலத்தில் அவர் மதுரையை கலக்கிக்
கொண்டிருக்கிறார் என்று செய்திகளை பார்த்த
போது ஆச்சரியம் எதுவும் இல்லை. அவர்
அப்படித்தான் என்று தெரியும்.
இப்பொழுது மதுரையை விட்டு அனுப்பிவிட்டார்கள்
என்ற போதும் ஆச்சரியம் எதுவும் இல்லை.
ஆட்சியாளர்கள் எப்பவும் இப்படித்தான் என்பதும்
நமக்குத் தெரியும் அல்லவா?
#
Thursday, 20 June 2013
பிரபாகரனுக்கு நோர்வே எழுதிய அச்சுறுத்தல் கடிதம்!
பிரபாகரனுக்கு நோர்வே எழுதிய அச்சுறுத்தல் கடிதம்! - விக்கிலீக்ஸ்
போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நோர்வே எழுதிய அந்தரங்கமான கடிதத்தில் "விடுதலைப் புலிகளமைப்பு ஆக்கபூர்வமான வழியினைத் தேர்ந்தெடுப்பதற்குத் தவறுமானால் அனைத்துலகத்தினது எதிர்விளைவு மோசமானதாக இருக்கும்" என அச்சுறுத்தப்பட்டிருந்ததாக ஆதாரத்துடன் செய்திகள் வெளியாகியுள்ளது.
இவ்வாறு விக்கிலீக்ஸஸ் வெளியிட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் 'சண்டே ரைம்ஸ்' இதழ் தெரிவித்துள்ளது.
ஓகஸ்ட் 17 2005 அன்று நோர்வேயினது வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றசனும் துணை வெளிவிவகார அமைச்சர் ஹெல்கேசனும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தினை லண்டனில் சந்தித்து உரையாடியபோது பிரபாகரனுக்கு என முகவரியிடப்பட்ட கடிதமொன்றைக் கொடுத்திருக்கிறார்கள் [கடிதத்தின் முழு விபரம் கீழே தரப்பட்டிருக்கிறது].
நோர்வே பிரபாகரனுக்கு அனுப்பிய கடிதத்தின் முழுமையான பகுதி இங்கு தரப்படுகிறது [தயவுசெய்து இதனைக் கவனமாகப் பாதுகாக்கவும்].
வெளிவிவகார அமைச்சு,
ஒஸ்லோ
16 ஓகஸ்ட் 2005
திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன்,
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
அன்புடன் பிரபாகரனுக்கு,
அமைதி முயற்சிகள் மிகவும் இக்கட்டானதொரு நிலையில் இருக்கிறது என்பதை நீங்கள் முழுமையான விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என நான் நம்புகிறேன். கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவரும் கொலைகள் மற்றும் பதில் கொலைகள் என்பவற்றை நோர்வேயும் அனைத்துலக சமூகமும் அதியுச்ச கரிசனையுடன் அவதானித்து வருகிறது.
விடுதலைப் புலிகளமைப்பு சிறுவர்களைத் தொடர்ந்தும் படையில் இணைந்து வருகிறது. அமைதி முயற்சிகள் தொடர்பில் விடுதலைப் புலிகளின் நோக்கம்தான் என்ன என்ற அவநம்பிக்கையினை ஏற்படுத்துவதாக இவை அமைகின்றன.
சிறிலங்காவினது வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டமையானது நிலைமையினை மேலும் மோசமாக்கியிருக்கிறது.
இவ்வாறு தொடராக இடம்பெற்றுவரும் கொலைகள் தொடர்பாக இடம்பெற்றுவரும் சட்ட நடவடிக்கைகள் பற்றிய முடிவுக்கு வரவேண்டிய தேவை நோர்வேக்கு இல்லை.
எவ்வாறிருந்தாலும், இந்தக் கொலைகளுக்கு விடுதலைப்புலிகள்தான் காரணம் என சிறிலங்காவிலும் அனைத்துலகிலும் மக்கள் கருதுகிறார்கள். மக்களின் இந்த எண்ணம்தான் அரசியல் யதார்த்தமாக உள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பானது அமைதி முயற்சிகளில் தொடர்ந்தும் முழு ஈடுபாட்டுடனேயே இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் புலிகளமைப்புச் செயற்படவேண்டியது அவசியமானது.
தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குள்ள அரசியல் தெரிவுகள் தொடர்பாக எடுத்துவிளக்குவது எனது கடப்பாடு என நான் கருதுகிறேன். இக்கட்டான இந்தத் தருணத்தில் விடுதலைப் புலிகளமைப்பு ஆக்கபூர்வமான வழியினைத் தேர்ந்தெடுப்பதற்குத் தவறுமானால் அனைத்துலகத்தினது எதிர்விளைவு மோசமானதாக இருக்கும்.
இந்தப் புறநிலையில் கீழ்க்காடும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் விடுதலைப் புலிகள் விரைந்து செயற்படவேண்டும் என நான் கோருகிறேன்.
01. இரண்டு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முழுமையான ஏற்றுக்கொண்டு செயற்படுவதற்கான நடைமுறைச்சாத்தியமான வழிகளைக் கண்டறிவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான மீளாய்வுக்கு நோர்வே விடுத்திருக்கும் அழைப்பினை ஏற்றுக்கொள்ளுதல்.
02. பாதுகாப்பினை மேம்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையிலான நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.
03. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் போக்குவரத்துக்காக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு முன்வைத்திருக்கும் பரிந்துரைகளை காலதாமதம் எதுவுமின்றி ஏற்றுக்கொள்ளுதல்.
04. வடக்குக் கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்திற்கும் மீள்கட்டுமான முனைப்புக்களை வேகப்படுத்தும் வகையில் நடைமுறைச்சாத்தியமான அரசியல் வழிவகைகள் ஊடாக ஒத்துழைப்பினை வழங்குதல். இதற்கு பி-ரொம்ஸ் எனப்படும் ஆழிப்பேரலை நிவாரணத்திற்கான உடன்பாடு தொடர்பில் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் செயற்படுவது அவசியமானது.
05. கொலைகளையும் சிறுவர் ஆட்சேர்ப்பினையும் உடனடியாக நிறுத்தும் வகையில் வினைத்திறன்கொண்ட முனைப்புக்களை மேற்கொள்ளுதல்.
தற்போது நிலவுகின்ற மோசமான நிலைமையின் தன்மையினை நீங்கள் முழுமையாக விளங்கிக்கொண்டிருப்பதோடு அமைதி முயற்சிகள் தொடர்பாக விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்ந்தும் முழு ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறது என்பதை அனைத்துலக சமூகத்திற்குக் காட்டும் வகையிலான உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள் என நான் வெகுவாக நம்புகிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
சுப்பு ராஜ்
Monday, 17 June 2013
ஜெயலலிதா முதல்வராக இருப்பதால் இலங்கைக்கு ஆபத்து- சொல்கிறார் கோத்தபாயா:
ஜெயலலிதா முதல்வராக இருப்பதால் இலங்கைக்கு ஆபத்து- சொல்கிறார் கோத்தபாயா:
கொழும்பு: தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கை தொடர்பாக எடுத்து வரும் நிலைப்பாடு காரணமாக இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு ஆபத்தாக உள்ளது என்று இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவின் தம்பி கோத்தபாயா ராஜபக்சே கூறியுள்ளார். இதுகுறித்து கொழும்பில் உள்ள கோத்தேல்வாலா பாதுகாப்பு பல்கலைக்கழத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது - இலங்கை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ள நிலைப்பாடும், கொள்கைகளும், எங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், இறையாண்மைக்கு ஆபத்தாகவும் உள்ளது. இலங்கையி்ல் என்ன நடக்கிறது என்று இந்தியாவுக்கு நன்றாக தெரியும். இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில், தமிழகத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக அங்கு தேர்தல் நடக்கும்போதெல்லாம் இங்குள்ள மக்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். சமீபத்தில் கூட சர்வதேச அளவில் இலங்கையை தனிமைப்படுத்த இந்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. தமிழகத்தின் பெரும் பகுதியினர், இலங்கைக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர். ஜெயலலிதாவின் நிலைப்பாடு, அவரது பேச்சு, அவரது கொள்கைகள், இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு ஆபத்தாக உள்ளது. இலங்கையில் உள்ள சில தமிழர்கள், தங்களது சக தமிழர்களை விட தமிழகத்து தமிழர்களிடம் அதிக நெருக்கம் காட்டுகின்றனர். பாசம் காட்டுகின்றனர். சில வெளிநாட்டு கட்சிகளுடன் கை கோர்த்து் கொண்டு, அகண்ட தமிழ் தேசம் அமைக்க முற்படுகின்றனர். மேலும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய சிலர் இலங்கைக்கு வெளியே குறிப்பாக தமிழகத்தில் இருந்தபடி இலங்கைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இதை மிகப் பெரிய மிரட்டலாக நாங்கள் கருதுகிறோம். இலங்கை கடல் பகுதிக்குள் தொடர்ந்து தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைகின்றனர். இவர்கள் போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத காரியங்களில் ஈடுபடுகிறார்கள். இதைத் தடுக்க வேண்டியது அவசியமாகும் என்று பேசியுள்ளார் கோத்தபாயா ராஜபக்சே.
இப்போதைக்கு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது: கர்நாடக முதல்வர்
இப்போதைக்கு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது: கர்நாடக முதல்வர்
பெங்களூர்: தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு தான் எதிராக இல்லை என்றும், ஆனால் தண்ணீர் திறந்துவிட தற்போதைக்கு வாய்ப்பில்லை என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஹராங்கி, கபினி, ஹேமாவதி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் குறைந்தபட்ச அளவை விட குறைவாகத் தான் தண்ணீர் உள்ளது. தண்ணீர் பிரச்சனை பெரிதாகி உள்ளது. வரும் மாதங்களில் பெங்களூர் மக்களுக்கு தண்ணீர் வழங்கவே அரசு சிரமப்படலாம். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு நான் எதிராக இல்லை. ஆனால் தற்போதைக்கு தண்ணீர் திறந்துவிடும் வாய்ப்பில்லை. எங்கள் மாநிலத்திலேயே குடிநீர் தட்டுப்பாடாக இருக்கையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி ஜூன் மாதத்தின் முதல் 20 நாட்களில் தமிழகத்திற்கு எப்படி 1.2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட முடியும்? கர்நாடகத்தின் பிரச்சனையை தமிழகம் புரிந்து கொண்டு தண்ணீர் கேட்டு வலியுறுத்தாமல் இருக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு நல்ல பலனை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேற்பார்வை குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் முடிவுகளை கர்நாடகம் ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழக அரசு கூறுவது போன்று நாங்கள் உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை நாங்கள் பின்பற்றுகிறோம் என்றார்.
ராஜ்யசபா தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளராக அக்கட்சியின் தலைமை நிலைய பொறுப்பாளரும் பொருளாளருமான ஏ.ஆர். இளங்கோவன் போட்டியிடுவதாக கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்:
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளராக அக்கட்சியின் தலைமை நிலைய பொறுப்பாளரும் பொருளாளருமான ஏ.ஆர். இளங்கோவன் போட்டியிடுவதாக கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். உடனடியாக இளங்கோவன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். ராஜ்யசபாவிற்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில், அ.தி.மு.கவின் 4 பேரின் வெற்றியும், அதிமுக ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜாவின் வெற்றியும் உறுதியான நிலையில், மேலும் ஒருவரின் வெற்றி தான் கேள்விக்குறியாக உள்ளது. இந்த இடத்துக்கு தி.மு.க. சார்பில் தற்போது ராஜ்யசபா எம்.பியாக இருக்கும் கனிமொழி வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டார். தேமுதிக போட்டியிடாவிட்டால் கனிமொழிக்கு வெற்றி சாத்தியம் என்ற நிலையில், தே.மு.தி.க சார்பில் கட்சியின் தலைமை நிலையப் பொறுப்பாளரும் பொருளாளருமான ஏ.ஆர். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை கட்சித் தலைவர் விஜயகாந்த்தே அறிவித்து விட்டார். இதையடுத்து இளங்கோவன் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். ஏ.ஆர். இளங்கோவன் சேலத்தை அடுத்த ஆத்தூரைச் சேர்ந்தவர். 20 வருடமான விஜய்காந்தின் மன்றத்தில் இருக்கும் இவர் டூவீலர் மெக்கானிக்காக இருந்தவர். படித்தது மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே. ஆனாலும் தேமுதிகவின் பொருளாளராக உள்ளார்.
Subscribe to:
Posts (Atom)