Wednesday, 3 July 2013

6000 வருடங்களாக இயங்கி தமிழர்களின் பழம்பெருமையை பறைசாற்றும் மாநகரம் :

6000 வருடங்களாக இயங்கி தமிழர்களின் பழம்பெருமையை பறைசாற்றும் மாநகரம் :



உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்கம், ஏதென்ஸ், ரோம் போன்ற மாநகரங்களஆய்விடும் போது அடுக்கடுக்கான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம் உருவாக்கப்பட்டது. ஆனால் சுமார் 6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் மதுரை தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள். நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை "The World's only living civilization" என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின் "The Story of India" ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்ஸ்.
மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வியக்கத்தக்க தகவல் என்னவென்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த இடத்தின் மீது அடையாளமாய் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது. இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம். அங்கு வந்து குறிப்பிட்ட நாட்களில் வந்து பூஜித்து வழிபடும் வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர். அவர்களை விசாரித்த போது பரம்பரை, பரம்பரையாக பாரம்பரியமாக அழிபடுவதாகவும் இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அது அவர்களது முன்னோர்கள் புதையுண்ட இடம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர். ஆம் நண்பர்களே சுமார் 6000 வருடமாக தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம் கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்கி வருகிறது என்றால் பிரமிப்பாக உள்ளதல்லவா?
அது மட்டுமல்ல மதுரைக்கு தூங்கா நகரம் என்ற பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் இட்ட பெயர் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக் கடைகள் பிரசித்தம். அவற்றை அல் அங்காடி என்று கூறுவதுண்டு. இதன் காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது.
ஆறாயிரம் ஆண்டுகளாக உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும், கலாச்சாரத்தையும், மொழியையும் சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம் மதுரை மட்டும் தான் என்பது பெருமைபடக்கூடிய விடயம் தானே!

குறிப்பு: அன்றைய மதுரை என்பது இன்றைய மதுரையைக் காட்டிலும் மிகப் பெரிய அளவுடையது. மதுரையுடைய துறைமுகமாக தொண்டி செயல்பட்டது மேலும் கீழ் திசையில் தூத்துகுடி வரையிலும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது!

Monday, 1 July 2013

தமிழகத்தில் அன்சுல் மிஸ்ரா ஐ.ஏ.எஸ் அதிகாரி டம்மியாக்கப்பட்டிருக்கிறார்.

Our Collector always great man..



தமிழகத்தில் அன்சுல் மிஸ்ரா ஐ.ஏ.எஸ்
அதிகாரி டம்மியாக்கப்பட்டிருக்கிறார்.
இனிமேல்வணிகவரித்துறையின்
இணை செயலாளராக இருப்பாராம். பசையுள்ள
பதவிதான். ஆனால் பைசா வாங்காத அன்சுல்
மிஸ்ராவுக்கு இது எதற்கு பயன்படப் போகிறது?
அவருக்கு மக்களோடு மக்களாக ஃபீல்டில் இறங்கிக்
கலக்கும் வேலைதான் சரிப்பட்டு வரும்.
வணிகவரிக்கு எல்லாம் வேறு ஆட்கள்
இருக்கிறார்கள்.
அன்சுல் மிஸ்ராவின் working style-
செண்டான் என்றொரு மனிதர். எங்கள்
அமத்தா ஊர்க்காரர்.
அவரது மகளுக்கு பண்ணாரியம்மன் பொறியியல்
கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால்
ஃபீஸ் கட்ட பணம் இல்லை. வங்கியில் லோன்
வாங்குவது பற்றிய விவரங்கள் தெரியாமல்
விட்டுவிட்டார். கடைசி நேரத்தில் பணம் புரட்ட
முடியாமல் கிட்டத்தட்ட படிப்பே வேண்டாம்
என்று முடிவு செய்துவிட்டார்கள்.
நல்லவேளையாக அந்தப் பக்கம் ஆய்வுக்குச் சென்ற
அன்சுல் மிஸ்ராவிடம் இந்தத் தகவல்
சேர்ந்துவிட்டது. விவரங்களைக்
கேட்டுவிட்டு அடுத்த நாள்
தனது அலுவலகத்திற்கு வரச்
சொல்லிவிட்டு சென்றுவிட்டார். செண்டானும்,
அவரது மகளும் சென்ற போது தேவையான
பணத்தைக்
கொடுத்துவிட்டு “இதை உங்களுக்கு சும்மா தரவில்
என்னிடமும் இப்போதைக்கு அதிகம் பணம்
இல்லை. சம்பளத்தில் இருந்துதான் இதைக்
கொடுக்கிறேன். வங்கிக் கடன் வாங்கித்
தருவதற்கு நான் பொறுப்பு. கையில் வந்தவுடன்
இதை எனக்கு திருப்பிக் கொடுத்தால் போதும்”
என்று சொல்லிவிட்டு அந்தப் பெண்ணை படிக்க
வைத்தவர் அன்சுல்.
லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி டேபிளுக்குள்
செருகிக் கொள்ளும் ஆர்.டி.ஓக்கள், சப்-கலெக்டர்கள்
பற்றிய கதைகளையே திரும்பத் திரும்ப கேட்டுக்
கொண்டிருந்தவர்களுக்கு, சம்பளப் பணத்தில்
உதவி செய்த அன்சுல் மிஸ்ராவெல்லாம் நிச்சயம்
ஆச்சரியமான அதிகாரிதான்.
சமீபகாலத்தில் அவர் மதுரையை கலக்கிக்
கொண்டிருக்கிறார் என்று செய்திகளை பார்த்த
போது ஆச்சரியம் எதுவும் இல்லை. அவர்
அப்படித்தான் என்று தெரியும்.
இப்பொழுது மதுரையை விட்டு அனுப்பிவிட்டார்கள்
என்ற போதும் ஆச்சரியம் எதுவும் இல்லை.
ஆட்சியாளர்கள் எப்பவும் இப்படித்தான் என்பதும்
நமக்குத் தெரியும் அல்லவா?

#